ஆலியே-16
பயணத்தில் உறக்கம் தள்ள சைதன்யனின் திண்மமான தோளில் சாய்ந்து கொண்டு உறங்கினாள்.
தன்னிருப்பிடம் வந்ததும் அவளை எழுப்ப, அவளோ மெல்ல திறந்தவளின் பார்வையில் அவ்வீடு தெரிந்தது.
“ஹோட்டலில் நாம தங்க போறதில்லை. நான் தேஜுவோட,
“நிறுத்தறியா… இது என் வீடு இறங்கி வலது காலை எடுத்து வைத்து வா” என்றவன் பணத்தைச் செலுத்தி இறங்கினான்.
அகமேந்திக்கு இவன் வீடா… என்று அமைதியாக வந்தாள்.
ஆபிஸ் கொடுத்து விட்டேனென்று கூறிய நேரம் முழுச் சொத்தையும் கொடுத்ததாகக் கூறினானே என்று யோசித்தாள்.
“இந்த வீடு என்னோட அம்மா பெயரில் வாங்கியது. அவர்கள் வாழ்ந்த வீடு. அவர்களுக்குப் பிறகு எனக்குச் சேர்ந்தது. இதைத் தவிர மற்றவையைக் கொடுத்துட்டேன்.
என் சொந்த உழைப்பில் சேர்த்த பணத்தில், உங்க வீட்டு சுற்றி இருந்த இடமும் ஓட்டு வீடும் வாங்கினேன். அங்கயே இருக்கற ஐடியால வாங்கினேன்.
நீ தான் இங்க கூட்டிட்டு வந்துட்ட. பரவாயில்லை.” என்று கொண்டு வந்த லக்கேஜை சோபாவில் வைத்துவிட்டு ப்ரிட்ஜ் திறந்து குளிர்பான டின்னை எடுத்து நீட்டினாள்.
வெளியேயிருந்து வந்ததும் சில்லென்ற பானம் எதுவும் அகமேந்தி அருந்தினால் அவளுக்கு அது சேராது. தொண்டை கட்டிக்கொள்ளும். ஆனால் வீட்டுக்கு வந்ததும் சைதன்யன் அவளிடம் நீட்ட தேஜுவிடம் மறுத்தது போல இவனிடம் மறுக்கத் தோன்றவில்லை.
முதல் முறை வந்த காரணத்திலும், அவன் வீட்டுக்கு வந்த உடன் கொடுப்பதை மறுக்கக் கூடாதென வாங்கிப் பருகினாள்.
அருந்துகையிலே குளிர் அதிகமாகவே இருந்ததை உணர்ந்தாள்.
“சாப்பிட ஆர்டர் கொடுத்திடவா?” என்று போனை எடுத்து தட்ட, அவளோ “வீட்டுக்கு வந்ததும் வெளி புட்டா.. அரை மணி நேரம் பொறு ஏதாவது செய்யறேன்.” என்று எழுந்து சமையலறையில் சென்றாள்.
பாஸ்தா பேக்கேட் இருக்கவும் அதனை எடுத்து வெந்நீரில் போட்டாள்.
ப்ரிட்ஜிலிருந்த கேரட் பீன்ஸ் முட்டை எடுத்துக் கட் செய்து வெங்காயம் தக்காளி, பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினாள்.
சைதன்யன் முகம் அலம்பி வந்து அவள் செய்கையையே காண “சீஸ் பேக்கேட் இருக்கா…?” என்றாள்.
“இருக்குமே…” என்றவன் அவளைத் தன் கரத்தின் வளைவுகளுக்குக் கொண்டு வந்து தேட,
“இடியட் என்ன அணைக்காம தேடியெடு” என்று நகரவும் முகத்தைத் தூக்கி வைத்துத் தேடினான்.
“லாஸ்டா பிரட்ல போட்டுட்டேன். இப்ப இல்லை” என்று கூறியதும் சமைக்கச் சென்றாள்.
கூடவே அவனும் சென்று வேடிக்கை பார்க்க,
“இங்கயே வந்து வேடிக்கை பார்க்காதே. எனக்கு அன்கம்பர்டபிளா இருக்கு.” என்று மேஜையைச் சுற்றி சுத்தப்படுத்தி உணவு மேஜையில் பாஸ்தாவை கொண்டுவந்து வைத்தாள்.
தட்டில் பரிமாறி அவனைப் பார்க்காமல் விழுங்கினாள்.
சாப்பிட்ட தட்டை எடுத்து சென்றவன் அதனைக் கையோடு அலம்பி வைக்கக் கண்டவள் அவன் பார்க்க நீரை பருகி முடித்தாள்.
“இந்த ரூம் நம்மளோடது.” என்று கதவை திறக்க, “எனக்குத் தனிரூம் வேண்டும். உன் கூடயிருக்க மாட்டேன்.” என்றவள் அவன் திறந்த கதவை பார்த்து நின்றாள்.
அதுவோ ஒற்றைப் படுக்கயறை கொண்டு தனிவீடு போன்று இருந்தது.
“இங்கயும் ஒர் ரூம் இருக்கு ஸ்வீட் ஹார்ட். தனியா எல்லாம் எதுக்கு. என் மேல் எனக்கு நம்பிக்கையிருக்கு. உனக்கும் வரும்… அப்படி நடந்துப்பேன்.” என்று சென்று மெத்தையில் விழுந்தான்.
அகமேந்தியோ அவள் அங்கிருந்த சின்ன அறைக்கு மாற்றலாகியிருந்தாள்.
கதவை தாழிட்டு மெத்தையில் பெட்டியை வைத்தவள் அசதியில் உறங்கி விட்டாள்.
அடுத்த நாள் காலையில் கதவு திறந்து எட்டி பார்த்தாள்.
சைதன்யன் உறங்கயிருந்த மெத்தை காலியாக இருந்தது.
வெளியே வந்து தேட அவனோ கிச்சனில் காபி டிரேயில் இரு கப்பை வைத்து திரும்பினான்.
“குட் மார்னிங்” என்று நீட்டவும் எடுத்துக் கொண்டாள். ஆபிஸ் கிளம்பும் வேகம் அவளுள் இருந்தது.
“நீ அங்க போனா… அவன் என்னை அவமதிக்கறதா எண்ணி உன்னை அவமதிப்பான். தேவையில்லாம எனக்குக் கோபம் வரும். என்னோட கோபத்தை நான் வெளிப்படுத்த விரும்பலை. தேவையில்லாம பிரச்” என்று பேசவும்
“நான் ஒன்றும் சின்னப் பாப்பா இல்லை” என்று பருகி முடித்து அவன் செய்து வைத்த பிரட் சாண்ட்விச் மற்றும் பழச்சாலைட் சாப்பிட்டு எழுந்தாள்.
“அவன் ஆபிஸ் தகாத மாதிரி நடந்தா உன்னால பேஸ் பண்ண முடியாது அகமேந்தி. அவன் ஒன்றும் கண்ணியமா பிகேவ் பண்ணுவான்னு நினைக்காதே.” என்று திரும்பி நின்று புரிய வைக்க முயன்றான்.
“என்ன நினைச்சிட்டு இருக்க, நான் ஒன்றும் சின்னப் பாப்பா இல்லை. எனக்கு எங்க எப்படி நடந்துக்கனு தெரியும். நீ ஒன்றும் கிளாஸ் எடுக்காதே.” என்று அறைக்குச் சென்று புறப்பட ஆரம்பித்தாள்.
சல்வார் அணிந்து ப்ரீஹேர் விட்டு கிளம்பியவளை கைகட்டி வேடிக்கை பார்த்தான்.
“ஆபிஸ்கு டிராப் பண்ணு.” என்று அவனிடம் கேட்கவும், தான் எப்பொழுதும் ஆபிஸுக்கு உபயோகப்படுத்தும் காரினை எடுத்து அவள் முன் நிறுத்தினான்.
காரில் நான் ஆபிஸ் கேண்டீன்ல சாப்பிட்டுக்கறேன். நீங்க சாப்பிடுங்க. மறக்காம ஆயின்மெண்ட் போடுங்க.” என்றதும் அவள் அக்கரையில் சிரித்து மகிழ,
“ரொம்பச் சந்தோஷப்படாதே… உன் கையைப் பார்க்கறப்ப எல்லாம் எனக்குக் குற்றவுணர்வு வருது. என்னால தானே சூடத்தண்ணீர் ஊற்றி இப்படி ஆச்சேனு கவலையா இருக்கு. உனக்கு இந்த மாதிரி குற்றவுணர்வு எப்படியோ எனக்கு மனசு வலிக்கும்” என்று கூற அவள் அலுவலகம் முன் நிறுத்தினான்.
அவள் இறங்கும் நேரம் அவளை இழுத்து உதட்டில் முத்தம் வைத்தான். அவள் திமிரவும் அதைப் பொருட்படுத்தாமல் அழுத்தமாய் ஆழமாய் முத்தமிட்டு விடுவித்தான்.
வேகமாகக் கார் கதவை திறந்து வெளியேறி நின்றவள் சுற்றிமுற்றி பார்க்க, சைதன்யனை கூடுமானளவு வெறுத்து முறைத்து உள்சென்றாள்.
அவள் கேபினில் வந்து அமர்ந்தாள். சல்வார் அணிந்திருக்கத் தாலி யார் கண்ணிலும் அதிகமாக ஈர்க்கவில்லை. ஆனால் கையில் மருதாணி அனைவரையும் ஈர்த்து விட்டது.
பெண்கள் தனியாக அவள் அலங்காரத்தில் கேட்க, மணமானதை சொல்லி முடித்தாள்.
கடந்த நான்கு நாளில் தருணேஷ் முதலாளி தோரணையில் கண்டது ஒரு அதிர்ச்சி என்றால் திடீரென அகமேந்தி திருமணம் என்றது இன்னொரு அதிர்ச்சி.
இருக்காதா… தருணேஷ் விரும்பியவள் என்ற பலராலும் பேசப்பட்டது அகமேந்தி என்பவளை தானே.
தன்னைக் கேள்வி கேட்டு பதிலாக என்ன சொல்வது என்று அகமேந்தி சங்கடப்பட்டாள்.
தருணேஷ் சைதன்யன் விளையாட்டு இங்கே ஒவ்வொருத்தருக்கும் விளக்கி புரியவைக்க இயலுமா..?
ஆனால் இவளின் சங்கடம் சைதன்யன் உணர்ந்தானோ என்னவோ கம்பெனி நோட்டிபிகேஷனில் மானிட்டரில் அந்த வீடியோ ஒளிப்பரப்பி விட்டான்.
“ஹாய் காய்ஸ், சடனா என் கம்பெனியை உங்க கோ-ஒர்ககர் தருணேஷிடம் விற்றுட்டேன்.
தருணேஷ் கொஞ்சநாளா இங்க ஆபிஸ் நிர்வாகம் கற்றுக்க வந்தவர். அவர் அலுவலக விஷயம் கற்றுக்கவும் என் கம்பெனியை சில தனிப்பட்ட காரணத்துக்காக விற்றுட்டேன்.
இதை அபிசியலா உங்களிடம் அறிவித்து இருக்கணும். பட் எனக்கும் அகமேந்திக்கும் நடந்த திருமணத்தில் கொஞ்சம் சொல்ல லேட்டாகிடுச்சு. எனிவே உங்களிடமிருந்து விடைப் பெற்றாலும் அகமேந்தி இங்க தான் ஒர்க் பண்ண போறா.
கூடிய விரைவில் சின்னதா ட்ரீட் உண்டு அதுக்கு ப்ரசியூஜரா அழைப்பு விடுப்பேன் வந்திடுங்க தேங்க் யூ” என்று சைதன்யன் மற்றும் அகமேந்தியின் திருமணப் புகைப்படமும் தனியாக நின்று எடுத்தவை எல்லாம் அங்கே மாற்றி மாற்றி ஒலிப்பரப்பாக மாறியது.
அகமேந்தி வந்ததை எண்ணி அவளைக் காண வந்த தருணேஷ் இந்த வீடியோ பார்த்து கடுப்பாகி நின்றான்.
அலுவலகம் கொடுத்தப்ப சைதன்யன் திமிராகச் சொன்னது. ‘நீ ஆபிஸ், சொத்தை அடைந்து இருக்கலாம். ஆனா நான் நினைத்தா உன் அலுவலகத்தில் உனக்கு எழுதி கொடுத்த பிறகும் ஆட்டி படைக்க முடியும்.’ என்ற சவாடலான பேச்சில் அதைப் பெரிதாக எடுத்துக்காது இருந்தவன் இன்றோ தன் மேற்பார்வையில் தனது அலுவலகத்தில் இப்படியொரு காணொளி எப்படி ஒலிப்பரப்பினான் என்ற கோபம் எழுந்தது.
இதில் அகமேந்திக்கு மற்றவர்கள் கைகுலுக்கி வாழ்த்து கூறவும் தன் காதல் அறிந்தவர்கள் ஒரு கேள்வி கூடக் கேட்காது இருப்பது தீயை ஊற்றியது.
அந்த நேரம் வசந்த் தன் அருகே இருக்க, இதெற்கெல்லாம் காரணம் இவனாகத் தான் இருப்பானென அவனை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றான்.
“என்ன விஸ்வாசமா… அவன் அங்கிருந்து படம் காட்டறான். நீ இங்க இருந்து ஆப்ரேட் பண்ணறியா? இப்பவே உன்னை வேலைவிட்டு தூக்கறேன் பாரு.” என்று மரியாதையின்றி ஆவேசமாகப் பேசினான்.
வசந்த் தலையை உலுக்கிவிட்டு அகமேந்தியை வாட்ச் செய்யவும் அகமேந்தி பார்வை வசந்திடம் வந்து நிலைப்பெற்றது.
தன் கணினியை உயிர்ப்பித்து அமர போனதும், தருணேஷ் அவன் அறைக்குக் கூப்பிட்டான்.
வசந்த் இது தேவையா… என்பதாகப் பார்த்து முடித்தான்.
அகமேந்தி அறைக்குச் சென்றதும் வசந்த் சைதன்யனுக்குக் கால் செய்ய ஆரம்பித்தான்.
சார் மேடம் வந்ததும் அவன் ஆரம்பிச்சுட்டான். என்ன சார் பண்ண?” என்றான் வசந்த்.
“வசந்த் பீ கூல் அவன் அத்துமீறினா என்னிடம் வாங்கிக் கட்டிப்பான். அது அவனுக்கு நல்லவே தெரியும். அதுவும் இல்லாமல் அகமேந்தி பப்லயே அடிக்க வந்தவ… பார்த்துக்கலாம்.” என்றதும் வசந்த் அறைக்குச் செல்ல முனைந்தான்.
“அகி… நீ இங்க திரும்ப வருவயென்று எதிர்பார்க்கலை. ரொம்பச் சர்தோஷமா இருக்கு உன்னை இங்க பார்க்கவும்.” என்று கூறினான்.
“தேங்க்ஸ்… நான் லீவ் அப்ளை பண்ணிட்டு தான் போனேன். ஒரேடியா போகலை.” என்றாள்.
“அவன் சொன்னானா… மொத்த சொத்தை கொடுத்ததா சொல்லியிருப்பானே. நான் யாருனு சொன்னானா… டாமிட் என்ன அவனுக்குக் கீழே வேலை பார்க்க வைச்சான் அகி. அதனால இப்படி ஆபிஸ் கைக்கு வருது என்றதும் உன்னை யோசிக்க வைக்க விடமா மூவ் பண்ணியிருக்கான் அகி.” என்று பேசவும்.
“எக்ஸ்கியூஸ் மீ… இது ஆபிஸ் தானே. பெர்சனல் பேசறீங்க.” என்று கேட்டதும்.
“அகி இங்க யாருமில்லையே பெர்ஸனல் பேசலாமே.” என்று கேட்டான்.
“சோ… பெர்ஸனல் பேசலாம்… யா… குட்… அப்போ இனி அகி மகினு கூப்பிடாதே. ஒழுங்கு மரியாதைறா அண்ணினு கூப்பிடு. புரியுதா…” என்றாள்.
“அகி அவன் எனக்கு அண்ணனும் இல்லை. தம்பியும் இல்லை. நான் அண்ணினு கூப்பிட மாட்டேன் டி” என்ற அடுத்த நொடி கன்னத்தில் கைவைத்திருந்தான்.
“இங்க பாரு நான் செம கோபத்தில வந்திருக்கேன். இன்னொரு முறை அகின்ன.. பல்லை தட்டை கையில் கொடுத்துடுவேன். இங்க நான் ஒர்க்கர் மட்டும் தான் அதுக்கு உண்டானதை மட்டும் பேசு. புரிஞ்சிதா… புரிஞ்சிதா டா” என்று கத்தவும் தருணேஷ் அமைதியாகக் கன்னத்தில் வைத்திருந்தான்.
இங்கு நடப்பதை வசந்த் மூலமாக லைவ் டெலிகாஸ்டில் பார்த்த சைதன்யன் வாயை மூடியபடி சிரித்தான்.
வசந்த் வந்ததும், “யூ கேன் கோ” என்றான். அகமேந்தி புன்முறுவலோடு “தேங்க் யூ சார்.” என்று அகன்றாள்.
அகமேந்தியை பணியில் இருந்து தூரத்தும் அளவுக்குக் கோபம் எழுந்தாலும் அதைச் செய்ய வேண்டாம் கூடவே வைத்திருந்து அவளுக்குப் பதில் தரவேண்டுமென எண்ணினான்.
ஆனால் வசந்த் கண்ணில் பட அவனைப் பணியிலிருந்து எடுக்க எண்ணி, “என்னடா சிரிப்பு உன்னை முதல்ல வேலையிலிருந்து தூக்கறேன் பாரு.” என்றான்.
- சுவடுபதியும்.
- பிரவீணா தங்கராஜ்.

Wow super agi. Well.done. very intresting sis
Super ..Ana evan kitta konjam ushara erukanum
nalla venum tharunesh ku inga vanthuta eppadi pesuran thappe illatha mari crt aana pathiladi aki good