ஆலி-27
தன் கையிலிருந்த போனை நழுவ விட்டான் தருணேஷ்.
எதிர்பார பதில் அதிர்ந்து போனதும் அங்கே நிற்க பிடிக்காமல் தன் கண்ணீரை துடைத்தபடி மௌனமாக வேகமாக வெளியேறினான்.
தன் பைக்கை உயிர்பித்தான் இவன் நடைப்பிணமாக வண்டியைச் செலுத்தினான்.
அகமேந்தி தான் தருணேஷ் போனை எடுத்து பார்க்க அதில் ஏகப்பட்ட தவறிய அழைப்பு பதிவாகி இருந்தது.
“தன்யன் அவன் போன். ப்ரியங்கா அத்தை நிறைய முறை கால் பண்ணியிருக்காங்க.” என்று காட்டவும் எடுத்துப் பார்த்தான்.
அதே நேரம் மீண்டும் அழைப்பு வர, “தருணேஷ் போனை கட் பண்ணிடாதே. ருத்ரேஷுக்குச் சீரியஸ் டா. ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருக்கேன். கொஞ்சம் சீக்கரம் வாடா.”
“நான் சைதன்யன் பேசறேன். தருணேஷ் இங்க போனை.. அதை விடுங்க ருத்ரேஷ்க்கு என்னாச்சு.?”
“சைதன்யன்…. உன் போனுக்குத் தான் போட்டேன். நீ எடுக்கலை. அதனால தான் தருணேஷுக்குப் போட்டேன். ருத்ரேஷை டாக்டர் சுந்தரோட மருத்துவமனையில் தான் சேர்த்துயிருக்கேன். நீ கொஞ்சம் சீக்கிரம் வர்றியா பா. எனக்குப் பயமா இருக்கு.” என்று கெஞ்சவும்,
“போன் ஆபிஸில் மறந்து வச்சிட்டேன். உடனே வர்றேன்” என்றவன் தலையில் அடித்து இவனுமே உடைந்து விட்டான்.
“என்னாச்சு தன்யன்” என்று கை வைக்கவும், “ருத்ரேஷு ஆஸ்பிடலில் சேர்த்து இருக்காங்க. நாம போகணும்.” அகமேந்தியிடம் பேசியவன் வசந்திடம், “வசந்த் ஐ அம் சாரி. நான் அப்பறமா வந்து மற்றது பேசறேன்.” என்று புறப்பட்டான்.
“சார் நான் கூட வரவா?” என்று கேட்டான்.
“தேவைப்பட்டா கூப்பிடறேன் வசந்த். நான் ஆஸ்பிடலுக்குப் போறேன். என் போனுக்கு… சே என் போன் ஆபிஸில்ல இருக்கு. நீ தருணேஷ் அகமேந்தி நம்பருக்கு கால் பண்ணு.” என்று அகமேந்தியை அழைத்துப் புறப்பட்டான்.
வருணிகா அழுதவள் வசந்திடம் “அவர் மறுபடியும் அடிக்ட் ஆகிட்டா என்ன செய்ய அண்ணா.” என்று கேட்டாள்.
“சைதன்யன் சார் வந்து பேசுவார்.” என்று பதிலுரைத்து சைதன்யன் அலுவலகத்தில் விட்டுவிட்ட போனை எடுக்கச் சென்றான்.
அகமேந்தி தருணேஷ் என்ன மனநிலையில் இருப்பானோ, உண்மை கூறியப்பின் சைதன்யன் முகமும் வாடி விட்டது.
இதில் ருத்ரேஷ் உடல்நிலையும் பயத்தைக் கிளப்பியது.
மருத்துவமனை வந்து சேரவும் ருத்ரேஷை பார்த்துவிட்டு வந்த சுந்தர், சைதன்யனிடம் நேரிடையாக வந்தார்.
ப்ரியங்கா பின்னாடியே செல்ல, “ரொம்பக் கஷ்டம் சைதன்யன். என்னாச்சு ரெண்டு நாளா மருந்து மாத்திரை எடுத்துக்கலை. சாப்பிடாதவன் போல இருக்கான். மனதிலும் எதையாவது போட்டுக் குழப்பித் தவிச்சிருப்பானோ என்னவோ பலகீனமா ஆயிட்டான். பார்ப்போம் டுவென்டிபோர் ஹவர்ஸ் கடந்தா தெரியும். ப்ரே டூ ஹிம்.” என்று கடந்துவிட்டார்.
ப்ரியங்கா அழுகை அந்தயிடத்தை நெகிழவைத்தது. அகமேந்தி அவர்கள் அருகே அமர்ந்து, “சரியாகிடுவான் அத்தை நல்லபடியா வந்து துள்ளி குதிப்பான் பாருங்க.” என்று கூறவும் அவள் மீது சாய்ந்தழுதார்.
சைதன்யனோ இமயனுக்குப் போன் செய்ய முயல அவன் போன் இல்லையென்றதும் தருணேஷ் போனை எடுத்து அதில் பேசலாமா என்று யோசித்தான். இது யோசிக்கும் நேரமா?
உடனடியாகக் குகூளில் இமயனை பற்றி அறிந்து அவர் பணிப்புரியும் மருத்துவமனை நம்பரை எடுத்தான். அந்த இதய மருத்துவமனையில் ரிசப்ஷன் பெண்ணிடம் இமயனின் தனிப்பட்ட நம்பரை கேட்டான். இவன் பெயர் கூறி கேட்கவும் ஏற்கனவே தன்யனை பற்றி அறிந்த ரிசப்ஷன் பெண்ணும் நம்பரை பகிர்ந்தாள்.
இமயனுக்குப் போன் அடித்துக் காத்திருந்தான். இம்முறை ரிங் ஒலித்தது ஆனால் எடுக்கபடவில்லை. சாதரணக் குறுஞ்செய்தியை தட்டி விட்டான்.
“இமயன் ருத்ரேஷ் சீரியஸா இருக்கான். நீங்க வாங்களேன். சுந்தர் அங்கிள் அவனைக் காப்பாத்தறது கஷ்டம்னு சொல்லிட்டார். ப்ளிஸ் நீங்க வந்திங்கன்னா எனக்கு நிம்மதியா இருக்கும். இமயன் நீங்க இந்த இந்தியாவிலே பெஸ்ட் டாக்டர் காப்பாற்றுங்க… ப்ளிஸ்..” என்று முடிக்கவும் அவன் குரல் உடைந்திருந்தது.
இமயன் அதைப் பார்க்கவில்லை, இந்தியாவில் இந்த வயதில் பெயர் பெற்றவன் அவன். அந்த ஒன்று சைதன்யனுக்கு எப்படியாவது வந்தால் நார்மலாக மாற்ற முயல்வான் என நம்பினான். இரண்டு மாதம் உடல் நலம் சீராக இருக்கும் ஆறு மாதம் கடக்கக் கொஞ்சம் கொஞ்சமாகப் பலம் இழக்கும் அதற்குள் ஆப்ரேஷன் பண்ண இதயம் கிடைக்கலாம் என்று ஆறுதல் படுத்தியவர்.
இங்குத் தருணேஷோ மனம் போன போக்கில் வண்டியை செலுத்தினான். மீண்டும் தோல்வி படுத்தோல்வி… காதலிலும், தந்தையென எண்ணியவர் தன் தந்தையே இல்லையென்ற வலியும் அவனுள் மீளா துயரில் மாற்றியது.
கண்களில் வழிந்த நீரை துடைத்தபடி ஒருகையில் ஓட்டினான். சிறுவயதிலிருந்து லட்சுமணன் தன்னிடம் காட்டிய அன்பில் எந்தக் குறையும் கண்டதில்லை அவன். மறுமணம் செய்து தன்னையும் அரவணைத்து போனவர். ருத்ரேஷு விடத் தன்னை அதிகமாகச் செல்லம் கொஞ்சுவார். இன்று அதற்கான காரணம் புரியவும், சைதன்யன் தன் தம்பி ருத்ரேஷ் ஏற்றது இதனால் தானா? தன் தம்பி… இல்லை அவன் தம்பி. நான்…. நான் ருத்ரேஷிற்கு அண்ணன் இல்லை.
சைதன்யனிடம் போட்டியிட தன்னால் இயலாது. அவன் உயரம் இன்று இமயமாகத் தோன்றியது. தான் அதளபாதாளத்தில் இருந்து மோதியது போல உணர்ந்தான்.
சே… அவன் என்னிடம் போட்டிக்கு நிற்கவே விரும்பியிருக்க மாட்டான். நான் எல்லாம் அவனுக்குச் சமமா என்ற பார்வையில் தான் தன்னை மதித்து இருப்பான்.
இதையே திரும்பத் திரும்ப யோசித்தான். கடைசியாக வருணிகா வீட்டில் சைதன்யன் வெடித்துப் பேசியது தோன்றவும் கண்களை இறுக மூடினான்.
அய்யோ வருணிகாவுக்கு இந்த உண்மை இப்ப தெரிந்து இருக்கும். இனி என் காதலை ஏற்பாளா. வசந்த் ஏற்கனவே புழுவை போலப் பார்ப்பானே.
அம்மா கூட இதனால் தான் என்னை ஈமசடங்கை செய்ய விடாது விட்டுச் சைதன்யனை செய்யவும் அமைதியாக வேடிக்கை பார்த்தாரா. அய்யோ இது தெரியாம அம்மாவை எத்தனை முறை காயப்படுத்தியிருக்கேன்.
ருத்ரேஷிற்கு உண்மை தெரிந்தால்… சைதன்யன் சொன்னால் அவனை ஏற்று என்னை இனி அண்ணா என்று கூப்பிட மாட்டானா, இப்பவரை அண்ணவாக நான் என்ன செய்து விட்டேன்.
இதுல ஆபிஸை ஏற்றுக்க என்னவெல்லாம் செய்தேன். சைதன்யன் நினைத்து இருந்தால் இந்த உண்மையை முன்பே கூறி என்னிடம் ஆபிஸை தராது விட்டிருக்கலாமே. அகமேந்தியும் அவனை அல்லவா காதலித்து இருக்கா? சைதன்யனை தேவையற்று கோபப்பட வைத்து அவனையும் கஷ்டப்படுத்தியது தானே.
எல்லாம் மூளையில் வந்து வந்து போக, இமையை மூடி வண்டியை செலுத்தினான். எதிரே வந்த மினி வேன் வேகமாக வந்தது. அதைப் பார்க்காமல் ஓட்டிக்கொண்டு வந்தான்.
மினி வேன் இவனை மோதவே வந்தது போல எதிரில் அசுரத்தனமாக வந்து இடிக்கப் பைக்கோடு தூக்கியெறியப்பட்டான்.
மினிவேன் இடிப்படவும் தூக்கியெறிந்து வானத்தில் பறந்து விசிறியதும் தான் தனக்கு விபத்து நேர்ந்ததையே உணரத்துவங்கினான்.
ரோட்டில் இரத்தவெள்ளத்தில் விழுந்தவனை, மினிவேன் டிரைவர் எட்டி பார்த்து, காட்டிய கொடுக்கற… டிரக்ஸ் வாங்கறப்ப காட்டிக் கொடுக்கக் கூடாதுனு எத்தனை முறை சொன்னோம். இப்ப போலிஸ்ல வகையா மாட்ட வைச்சிட்டியே டா நாயே செத்து தொலை.” என்று வார்த்தையை உதிர்த்து செல்ல தருணேஷ் கண்கள் தன்னை இடித்த வண்டியின் ஓட்டுனர் கண்டு இகழ்ந்த முறுவல் புரிந்தான்.
தன் தீயப்பழக்கம் தன்னைப் பின் தொடர்ந்து வந்தது தன்னையே அழிக்க நேர்ந்ததை எண்ணி கசந்த முறுவல் உதிர்த்தான்.
ரோட்டில் தலையில் இரத்தம்வழிய கிடந்தவனை ஸ்டக்சரில் ஏற்றி செல்ல, அவன் விழிப்பில் இருக்கவும் குடும்ப நபரின் போன் எண்ணை கேட்டனர்.
தன் அன்னை ப்ரியங்கா நம்பரை கூற வந்தவன். ஏனோ சைதன்யன் நம்பரை கூறி அவரிடம் ருத்ரேஷுக்கு ஆக்சிடெண்ட். அவர் உங்களிடம் சாரி கேட்க சொன்னார் சொல்லிடுங்க.” என்று பேசினான்.
இரத்தம் வழிய கொஞ்சம் கொஞ்சமாய்க் கண்கள் சொருக கிடந்தான்.
அதே போல ஆம்புலன்சில் இருந்தவரோ, போனில் அழைத்துச் சைதன்யனிடம் அதே போலச் செய்யவும் வசந்த் கையிலிருந்த போனில் வந்த குரலில் திடுக்கிட்டான்.
அவன் போனில் பேசுவதைக் கூடயிருந்து கேட்ட வருணிகா, “தருண்” என்று அலறி முடித்தாள்.
அந்த அலறலில் வசந்த் விரைவாக அவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
போனிலே எந்த மருத்துவமனை என்று கேட்கவும், டாக்டர் சுந்தர் மருத்துவமனை தாண்டி தான் வேறோரு மருத்துவமனை செல்ல இருந்ததை டாக்டர் சுந்தரின் மருச்துவமனையில் அனுமதித்துப் பார்க்க சொன்னான். அங்கு வருவதாகத் தகவலும் அறிவித்து முடித்தான்.
வசந்த் உடனடியாகத் தருணேஷ் எண்ணிற்குப் போன் செய்து விவரம் பகிர்ந்தான்.
“என்ன சொல்ற வசந்த். எப்படி… இங்கயா? ஓ மை காட்.” என்று பதறிப்போனான்.
அகமேந்தி அருகே வந்து என்னாச்சு தன்யன்?” என்று கேட்க பலமிழந்தவனாகத் தருணேஷுக்கு ஆக்சிடெண்ட். அவனை இங்க தான் கூட்டிட்டு வர்றாங்க.” என்று அழுதான்.
ப்ரியங்கா அதைக் கேட்டு மயங்கி சரிந்திட, அவரை ஒருபக்கம் செவிலியர் இரத்தழுத்தம் பார்த்து ஒர் அறைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பார்த்தனர்.
“அய்யோ… இதுக்குத் தான் அகமேந்தி எதுவும் பேசாம, விட்டு கொடுத்து அமைதியா போனேன். என்ன பேச வச்சிட்டான். என்ன நிலையில் இருக்கானோ. இங்க ருத்ரேஷ் அங்க தருணேஷ். நான் என்ன செய்யறது “என்று புலம்பினான்.
வேகமாக ஆம்புலன்ஸ் வரவும் ஸ்டக்சர் வார்டுபாய் என்று மருத்துவர்கள் சூழ்ந்தனர்.
டாக்டர் சுந்தர் தருணேஷு பார்த்துக் கொள்வதாக அழைத்துச் சென்று மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்.
தலையில் பலத்த அடி, இரத்தம் நிற்காமல் கசிந்து இருந்ததால் உடலில் இரத்தம் ஏற்ற ஏற்பாடும் நடந்தது. நல்ல வேளை எளிதில் கிடைக்கும் ஓ குரூப்.
சைதன்யன் இருபக்கமும் கண்கள் தவிக்க ஓய்ந்து போனான்.
ப்ரியங்கா மயங்கி ஒர் அறையில் இருக்க, ருத்ரேஷ் அவசரபிரிவு அறையிலும், தருணேஷிற்குச் சிகிச்சையும் என்று மருத்துவமனை தங்கள் குடும்பத்தின் உயிர்களைக் காப்பாற்ற போராடியது.
டாக்டர் சுந்தரின் நண்பன் குடும்பம் என்ற முறையில் சிகிச்சை தங்குத்தடையின்றிச் சரியாகச் செயல்பட்டடுது.
அகமேந்தி சைதன்யன் இருவரும் தங்களுக்குள் எப்படி ஆறுதலளிப்பது புரியாது தவித்தனர்
அந்நேரம் வசந்த் வருணிகா வரவும் சைதன்யன் வசந்திடம் தன் கவலையைக் கொட்டும் விதமாகக் கையைப் பற்றி அறைகளைச் சுட்டி காண்பித்தான்.
வருணிகா குமறி குமறி அழவும் அகமேந்தி சைதன்யன் இருவருமே அவள் தருணேஷை விரும்புவதைத் தெளிவாகவே உணர்ந்தனர்.
இந்தக் காதல் இப்ப தான் வெளிப்படுகிறது. அதற்குரியவனோ விபத்தில் கிடந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.
டாக்டர் சுந்தர் பெருமூச்சை விடுத்து தலையை ஆட்டி வெளியே வந்தார்.
சைதன்யன் உடனே அவர் அருகில் வந்து கண்களில் நிலவரம் என்னவாக இருக்கும் என்ற கலவரத்தோடு பார்த்தான்.
“சாரி சைதன்யன். ஓவர் பிளட் லாஸ். என்னதான் பிளட் ஏற்றினாலும், உயிருக்கு ஆபத்து தான். அவனைப் பிழைக்க வைக்க முடியுமானு எனக்குத் தெரியலை. வரும் பொழுதே கண்ணில் அசைவு கொஞ்சமா தான் இருக்கு. இப்ப தான் கொஞ்சமா சரிப்படுத்தியிருக்கோம்.
அவன் பேசினான்…. என்ன சொன்னானா… அவன் இறப்பு கண்ணுக்குத் தெரியுதாம். அவன் இறப்பதற்குள் அவன் ஹார்டை ருத்ரேஷுக்கு வைக்கச் சொல்லறான். உன்னிடம் பேசனுமாம். போய்ப் பேசு.” என்று தட்டிக்கொடுக்கவும் தள்ளாடினான்.
“ஜ காண்ட் அங்கிள்.” என்று மறுக்கவும்,
“நமக்கு நேரமில்லை சைதன்யன். ஒர் உயிர் போகணுமா?. இரண்டு உயிர் போகணுமா? நீ இதைத் தான் யோசிக்கற நிலையில் இருக்கற. போ” என்றார்.
தருணேஷ் அறைக் கதவை திறந்து உள்ளே வந்தான்.
சைதன்யன் வரவும் கதவு திறக்க அங்கே பாதிப் பிணமான தோற்றத்தில் தருணேஷ் பார்வை நிலைக்குத்தி பார்த்தான்.
“ஜெயிச்சிட்டியே டா. எங்கப்பா அன்பு உனக்குத் தான்ல. ரொம்பச் சந்தோஷப்படாதே. எங்களோட வீட்டுக்கு வந்தா என்னை அடுத்தவனோட பையன் என்ற ரீதியில் பார்க்க மாட்டார்.
எனக்கு இப்பவும் அப்பா மேல அன்பு இருக்கு தெரியுமா. என் அப்பா அவர் இல்லையென்றாலும் வாழ்ந்த காலத்தில் அம்மாவை மறுமணம் செய்த ஹீரோ அவர். என்னை அவர் பையன் நிலைக்குப் பார்த்துக்கிட்டவர். அவர் உயிரோட இருந்தப்ப கொள்ளி போட விடலாமானு கேட்டா. யோசிக்காம எஸ் அவனும் என் பையன் போட சொல்லு தன்யன்னு உன்னிடம் சொல்லியிருப்பார்.”
சைதன்யன் என்னவோ பேச வரவும், ” ப்ளிஸ் நீ பேசாதே. எனக்கு நேரமில்லை.” என்றவன் “நீ ஹீரோ அதான் என்னிடம் மறைத்து பெருந்தன்மையா இருந்துட்ட. என்ன இருந்தாலும் நான் செகண்ட் ஹீரோல. அதுவும் கெட்டவன். நீ விரும்பறேனு தெரிந்தும் அகமேந்தியிடம் பிளே பண்ணினேன். சாரி…. நான் போறேன்.
என்னோட இதயத்தை என் தம்பி… இல்லை உன் தம்பில…” என்று இளக்காரமாகச் சிரித்து, “இல்லை இப்பவும் என் தம்பி ருத்ரேஷ் தான். அவனுக்கு நான் அண்ணாவா எந்தக் கடமையும் செய்யலை. என்னோட இதயத்தைக் கொடுத்து அவன் உடலில் ஒர் இடத்தைப் பிடிக்கிறேன்.” என்றதும் சைதன்யன் கண்கள் நீரை சுரக்கவும்,
“அம்மாவை பத்திரமா பார்த்துக்கோ. என்னை விட உன்னை ரொம்பப் பிடிக்கும். உன்னை மாதிரியே ருத்ரேஷை வளர்க்க ப்ரியப்படுவாங்க. தயவு செய்து ப்ரியங்கானு கூப்பிடாதே. முடிந்தா சித்தினு கூப்பிடு.” என்றவன் பெருமூச்சை வெளியிட்டான்.
“உன்னிடம் கடைசியா தோற்கறேன்.” என்றவன் கண்கள் சொருக, டாக்டர் சுந்தர் கண்ணாடி பேழை வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தவர் ஓடி வந்தார்.
“சைதன்யன் நேரம் கடத்தாதே. என்ன பண்ண ருத்ரேஷுக்கு ஆப்ரேஷன் பண்ண வா.” என்று கேட்டார்.
-சுவடு பதியும்.
-பிரவீணா தங்கராஜ்.

Omg big twist. We didnt expect this sis. Really worried a lot sis. Very intresting sis. Emotional episode sis.