பிரவீணா தங்கராஜ்-கதைக்கான விமர்சனம் - Praveena Thangaraj Novels Forum
Hello Miss எதிர்கட்சி - விமர்சனம்
எவ்வளவு பிளான், யாரெல்லாம் கூட்டு களவானி, இதெல்லாம் என்னால கொஞ்சம் கூட கெஸ் பன்னவே முடியலை!!... அதுவும் யாரு பிளான்ல யாரு சிக்கிருக்கான்னு நான் ஒன்னு நினைச்சு, அது ஒன்னு நடந்து!!... But very interesting!!..
பெண்ணவளின் முயற்சிகள், அதுக்கான உழைப்பு, சரவெடி பேச்சு எல்லாமே சூப்பர்!!... ஆனாலும் சில இடத்தில அவனுக்கு பதிலடி மட்டுமே இருந்தது, அங்க அவளோட Smartness ah பயன்படுத்தியிருக்கலாம்!!...
ஆனால் அவனோட நிதானம் எனக்கு ரொம்ப பிடிச்சது, தெரியாததை கத்துக்க நினைச்சது அருமை!!!... அவன் மக்களை பேசுனது திமிர்லயா இருந்தாலும், அவன் சொன்ன மொத்தமும் தப்பில்லையே, யோசிக்க வேண்டிய விஷயமும் இருக்கே!!... And most importantly he perfectly balenced his professional and personal lyf❤️!!..
அப்பாவா நட்ராஜ் விட இலக்கியன் அப்பாவை ரொம்ப பிடிச்சது!!... நட்ராஜ் அவருக்கு அவரோட மகளே தக்க பதில் சொன்னது சூப்பர்!!...
சிதம்பரம் சார்👌🏻👌🏻!!..
ஹாஸ்பிட்டல்ல வரும் அந்த பிரஸ் மீட்ல சுரபி பேசுறது வேற லெவல்!!.. அந்த மாதிரி தான் சுரபி கிட்ட இருந்து நிறைய எதிர்பார்த்தேன்!!..
கடைசியில சுரபி அவங்க அம்மாகிட்ட சொன்ன தகவல்கள், வியக்க வச்சது!!... புதுசா நானும் பல்லவிமா வோட சேர்ந்து தெரிஞ்சுகிட்டேன் கா!!..
வார்த்தையாடல்கள் அருமை கா!!.. அமுதா சொன்ன சில எடுத்துக்காட்டு லாம் யோசிக்க வச்சது!!..
நான் அமுதாக்கு ஃபேன் ஆகிட்டேன்😍!!..
கதை ரொம்ப படிச்சது கா!... சைட்ல படிக்க முடிலையேன்னு, பிரிதிலிபி ல ஒவ்வொரு எபிக்கும் வெயிட் பன்னி படிச்சுட்டு இருந்தேன், சைட்ல திரும்ப link activate பன்னதுக்கு ரொம்ப நன்றி கா!!...
இன்னும் நிறைய கதைகள் எழுத மனமார்ந்த வாழ்த்துகள் கா❤️!!...
Kodhaihariram prasad review for உயிரில் உறைந்தவள் நீயடி
பிரவீணா அக்காவின் நேரடி புத்தகமாக வந்த உயிரில் உறைந்தவள் நீயடி கதை செம...
கதை கரு கோபத்தால் விளையாட்டு பேச்சை சில தவறான சுழ்நிலையால் நாயகியை பழிவாங்க நினைக்கும் நாயகன் தன்னோட சிறு விளையாட்டு பேச்சால் ஓருவனின் மனைதை காயப்படுத்தியது தெரியாமல் சுழ்நிலையால் அவனை கல்யாணம் செய்து கஷ்டப்படும் நாயகி இருவரின் புரிதலகளால் அவர்கள் வாழ்க்கை எப்படி சென்றதே கதை கரு செம சூப்பர்
ஆரம்பம் ஆண்டி ஹீரோவாக வருகிறான் ... அக்காவின் செயலுக்கு தங்கை பழிவாங்க செய்வதாக காட்டியது அதற்கு தகுந்தவாறு அவனின் பேச்சு செயல் இருந்தது ஆனால் அவன் நாயகி பேசிய விளையாட்டு பேச்சு சில சுழ்நிலை நிகழ்வுகளால் உண்மை என்றானது ஆனால் நாயகன் நாயகியின் வார்த்தைகளால் காயப்பட்டது சுழ்நிலையும் அவளுக்கு எதிராக போனது அவளை கஷ்டப்பட்ட வைத்தது ஆனால் நாயகனின் காதல் செம ... காதலை உணர்மால் நாயகியை பழிவாங்க செய்தது சிறு பிள்ளைதனமாக இருந்தது அவனின் தவறை அழகாக சுட்டி காட்டும் தாய் தந்தை நண்பன் செம...தன்னோட காதலியை கைப்பிடிக்கும் போது பெற்றோரின் வலி தெரியாமல் அந்த வலி தன்னோட பெண் தனக்கு வரும் போது உணர்ந்து அதற்கும் மனந்தால் வருந்துவது நைஸ்
தன்னால் தன் தாய் தந்தை பட்ட அவமானத்தை தன்னோட பெண் ஓடிப்போனதும் புரிந்துக் கொள்ளும் நாயகியின் பெற்றோர்
அக்கா காதலித்தவனுடன் போனதால் தான் மண்பெண்ணாக மாறி கணவனால் வார்த்தைகளால் கஷ்டப்பட்டு அக்காவின் செயலுக்காக தன்னை கஷ்டப்படுத்தப்படவில்லை தன்னோட விளையாட்டு பேச்சினால் காயப்பட்டவன் பண்ண தவறை மன்னித்து அவனின் அன்பு காதலை புரிந்து வாழ்வது செம..
நண்பன் தவறு செய்யும் போது அவனிடம் சுட்டிக்காட்டி நண்பனை திருத்தியது செம... முதலில் வில்லனாகவும் ஆண்டிஹீரோகவும் காட்டப்பட்டு ஆனால் சுழ்நிலை தான் அவனை அப்படி காட்டி இறுதியில் பாசமுள்ள மகனாகவும் நல்ல கணவனாகவும் சொன்னது சூப்பர்
Kokila Balraj review for மௌனமே வேதமா& பிரம்மனின் கிறுக்கல்கள்
ரைட்டர் :பிரவீணா தங்கராஜ்
1. மௌனமே வேதமா
1. கல்லூரியில் வேலை பார்க்கும் விரிவுரையாளர் அவரை காதலிப்பதாக தொல்லை செய்யும் மாணவி
இதனால் ஏற்படும் இன்னல்களும், விளைவுகளும் பாதிக்கப்பட்டது என்னவோ பிரணவி.
Short and sweet story
2. பிரம்மனின் கிறுக்கல்கள்
2. Covid அரக்கனின் கோரப்பிடிக்கு பழியான 3 உயிர்கள்... அவர்களை இழந்தவர்கள் ஒரே குடும்பமாக இணைவதும் அவர்களின் மனமாற்றம் அதற்கான காரணம் என்று அழகா எடுத்துட்டு போறது சுவாரஸ்யம்
இந்த இரு நாவல்கள் தான் இந்த ஆண்டோட இறுதியில் படித்து முடித்தது
31 Dec 2024
இனி 2025 தான்
As always happy reading and happy writing too 🥰🥰🥰
Sharnyah Lingeswaran review for பிரம்மனின் கிறுக்கல் & துஷ்யந்த
Hey hi da…. Read 2 more of your stories from the site. Brammanin kirukalkal and thusyantha he thusyantha…
“Brammanin kirukalkal” was a beautiful story on 2nd marriages. Generally this topic is very sensitive and not many can convey the message without messing it up. But you have done it very beautifully by maintaining it close to reality and also kept it very light and suttle without any over exaggeration so that when you finish reading you have a smile on your face.
“Thusyantha he thusyantha” was a complete entertainer. I really don’t know under what category to box it because it had all aspects. Negativity (which is not so negative), romance, comedy, power, masculinity/ femininity of male / female and much more.
I realised that most of us resemble Thuruvan to some extent (atleast me). Irrespective of our good intentions the way we present it only is noted by the society, but no one bothers to see it in depth and identify the good intentions behind those actions or realise that it was of some good to them as well.
And in today’s world even the good deeds have to be done in a harsh manner for it to achieve its actual purpose.
On the other the person doing it won’t be bothered of what people are thinking, and continues with the good deeds towards the society. They won’t bother to sit and explain themselves and seek validation.
They only expect a reality check from those close to their heart.
While people think they the hard and cold hearted, deep down they are the people who have really faced problems, heart breaks and have suffered a lot. But they don’t want others to know about it and also don’t want people do face the same problems.
But on the whole all the characters were presented and distributed beautifully.
Thanks for a good read.
Looking forward to more of
your writings.✨
அனுவும் டினுவும் கதைக்கு Mohanraj review (facebook review)
Mohanraj review
படத்தில் ஸ்கீரின் ஷாட் தொகுத்து உள்ளேன்.
Screenshot_20231211-094742.png
வெண்மேகமாய் கலைந்ததே
வெண்மேகமாய் கலைந்ததே
கதையின் கரு எளிமையானது ... ஆரம்பமே குழந்தை விட்டைவிட்டு வெளியே செல்லவது தற்போதைய காலத்தில் குழந்தைகள் பெற்றோர் கொஞ்சம் அதிகமா திட்டினால் விட்டைவிட்டு செல்வது தவறான முடிவு எடுக்கிறார்கள் என்பதையும் அதனால் வாழ்க்கையில் அவர்கள் படும் கஷ்டம் அவர்களின் இந்த குணத்தால் குடும்பத்தில் எப்படி பட்ட சுழ்நிலை உருவது பற்றியும் எப்போதும் போல எளிமையாக சொன்னது
குடும்பம் பகையாக இருந்தாலும் தன்னோட காதலை விட்டு தறாமல் திருமணம் செய்பவன் காவல் துறை வேலையில் கிடைக்கும் கேஸின் மூலம் தன்னோட உயிரை பணையம் வைத்து அங்கு மாட்டிய குழந்தைகளையும் காதலினால் ஏமாற்றம் பட்டு இருக்கோம்னு தெரியாத பெண்ணையும் காப்பாற்றும் சர்வா செம ❤️❤️❤️ தன்னை ஓருவன் ஏமாற்றிகிறான் தெரியாமல் அவனின் கூடத்திடம் சிக்கி அங்கேயிருந்த தப்பிக்க உதவும் சர்வாவின் வார்த்தைக்காக தன்னோட உயிரை பணையம் வைத்து ஊரிலிருந்து ஓடிவந்த பையனை காப்பாற்றும் மான்ஸ்வி செம
குடும்பத்தை எதிர்த்து அவனுக்காக வாழும் பிருந்தா செம கணவன் இறந்துவிட்டான் நினைத்து கஷ்டப்டும் பிருந்தாவின் நிலை பாவம்
சர்வா இறக்கவில்லை தெரியவரும் போது குடும்பத்திலுள்ள உறவினர்களுக்கு ஆனந்தம்
விஹான் ஆரம்பத்திலேருந்தே தந்தையின் தவறான புரிதலால் மணமுடைந்து மாறுபவன் அண்ணனிற்காக வருபவன் எல்லாரையும் வார்த்தையாலே கஷ்டப்படுத்திகிறான்
அண்ணனை கஷ்டப்படுத்தியவர்களை அழிக்க நினைக்கும் யதார்த்தமான நபர்
மானஸ்வியை ஆதட்டி உருட்டி நியாயத்தை ஏற்றுக்கொள்ள வைக்கும் பாங்கு சூப்பர் தந்தை செய்த சிறு தவறால் அவரின் மேல கோபத்தை கூட எளிதாக வெளிப்படுத்தி அவரை ஏங்க வைத்தவன் செம மாஸ் இறுதியில் மானஸ்வி விஹான் ஜோடிகள் யதார்த்தமான வாழ்க்கையை ஏற்பது சூப்பர்
Selvarani review for நீயின்றி வாழ்வேது
நீயின்றி வாழ்வேது.
விஷாகன் விருஷாலி.இந்த ஜோடி எப்போ பிரியப்போகுதோன்னு நினைச்சு கிட்டே படிச்சேன்.ஆனால் இருவரின் புரிதலும் ஆழமாக இருந்தது.எல்லா வீட்டிலும் பிள்ளைகள் தப்பு பண்ணுவாங்க, இந்த கதையில் அப்பாவின் தவறால் பிள்ளைகளுக்கு சிக்கல்.
அதுவும் ஒரு பெண் குழந்தையை பெற்று முதல் குடும்பத்துக்கு தெரியாமல் திருட்டுத்தனம் செய்வது எல்லாம்... விஷாகன் அடித்து உதைத்தது தப்பே இல்லை.இருவரின் சாயலும் ஒரே மாதிரி இருப்பது,விஷாகன் மீது பழி விழுவது எல்லாம் அட கொடுமையே தான்.
விவேக்கின் துணையால் தப்பிக்கிறான்.
விருஷாலியின் படிப்பும் அவளின் ஆசிரியர் அறிவுரையும் பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றி அழுத்தமாக எடுத்து சொல்கிறது.ஒரு எழுத்து என்னவெல்லாம் செய்யும் என்பதை நிறைய எழுத்தாளர்கள் உணர்ந்து எழுதுகிறார்கள்.
Chitrasaraswathi review for நீயின்றி வாழ்வேது
நீயின்றி வாழ்வேது எனது பார்வையில்.
விசாகன் படிப்பை நிறைவு செய்து தண்ணீர் வியாபாரம் செய்கிறான். அவன் அப்பா வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து அவருக்கு அபர்ணா என்ற பெண் குழந்தை இருப்பது தெரிந்து அப்பாவை அடித்து அதற்கு மருத்துவமும் பார்க்கிறான். அவன் அப்பாவின் சொந்தத்தில் வைஷாலியை திருமணம் செய்ய முடிவு செய்து திருமணம் நடக்கும் நிலையில் அவன் அப்பா இரண்டாவதாக வாழும் பெண் இறந்துவிடுவதால் பெண் அபர்ணாவை அனாதையாக விட மனமில்லாமல் தன்னுடன் அழைத்து வந்துவிடுகிறான்
. தன் அப்பாவின் மகள் என்று சொல்லாமல் இருப்பதால் விசாகன் மீது சிலருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. அபர்ணா பற்றிய உண்மைகள் அவன் குடும்பம் மற்றும் வைஷாலியின் அண்ணன் விவேக்கிற்கு மட்டுமே தெரியும். இந்த நிலையில் திருமணம் நடந்து இருவரும் புரிதலுடன் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். விசாகன் தம்பி சுகிர்தன் கிறித்தவ பெண் ஜெனிபரை விரும்புகிறான். சுகிர்தன் அப்பாவை திட்டிவிட மனமுடைந்து விபத்தில் சிக்கியவர் இறந்துவிடுகிறார். அபர்ணா பற்றிய உண்மைகள் தெரியாதவர்கள் விசாகன் அப்பாவை பற்றி சொல்வதை நம்ப மறுக்கிறார்கள். இருவரின் புரிதலும் அருமை. வைஷாலி உண்மையை ஏற்றுக் கொள்கிறாளா இருவரின் வாழ்க்கை சுமூகமாக சென்றதா?
சுயநலமான சுகிர்தன் வாழ்க்கை என்னவாயிற்று என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார் எழுத்தாளர். நல்ல யதார்த்தமான நடையில் விறுவிறுப்பாக தந்திருக்கிறார். உண்மைக் கதையை தழுவியது என்று சொல்லியிருக்கிறார் எழுத்தாளர். நல்ல நடையில் அழகாக தந்திருக்கும் எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.
Bawani Balasubramaniam review for நீயின்றி வாழ்வேது
#பவாவிமர்சனம்
#நீயின்றி #வாழ்வேது
கண்டநாள் முதலாய் காதல் துதிபாட
கண்டு கொண்ட பின்னால் விதி விளையாட
கேள்வனின் நிதானம் கேள்வியாகாமல் விடையாகி மகிழ
என்ன தவம் தான் செய்தனை இவனை ..
சுயநலமில்லா குமரன் சுகம்விரும்பியே சுமந்த இல்லால்
எத்துணை நேசங்கள் இங்கே மகிழ்ந்தாட..
நீயின்றி வாழ்வேது என்னில் என துள்ள
நீயீன்றியே நானேதடா என்றானதோ துணை நிலா..!!
சிறியவர்கள் தவறு செய்தால் பெரியவர்கள் திருத்தலாம்!!, பெரியவர்களே பிழையறிந்தால் சிறுவர்களின் நிலை விதி வழியே தானோ. கதையின் சாரம்.😙👌👏
நாயகன் விஷாகன்- அருமையான நாயகன் என்ற ஒற்றை சொலைலில் அடக்கவே முடியாது மிக மிக அருமையாவன்.
தன் தந்தையின் ஒரு பிழையால் இவன் வாழ்வே சூழன்றாடி போவது பாவமே. சிறு வயதிலே குடும்ப பாரம் இவன் தோளிலே.
நன்மை தீமை அறிந்து இவன் செயல்படும் பல இடமெல்லாம் அருமையே.❤❤❤❤
காதல் இவனுக்குள் வரும் போது. காதலை ரசித்தாலும் அந்த பொருப்பு எனும் மாயை இவனை வதைப்பது சங்கடமே. புரிதலான மனைவியின் காதலும் அழாகே. மனைவியுடனான இவனின் காதல் மிகவும் அருமை. ❤❤❤❤
சுகிர்தன்- சுயநலமாய் வந்து சென்றாலும் , வாழ்க்கையில் அடிப்பட்டு பின் தன் பிழையறிந்து எழுவது சிறப்பு.👌❤
விவேக் - தோழனை தாண்டிய மச்சான் இவன் .அருமையான புரிதலான அன்பு தெய்வ மச்சான் என்றால் மிகையில்லை .💖💖
நாயகி விருஷாலி- கிராமத்து பைங்கிளி. கட்டுப்பாடு நிறைந்த பெண்ணவள். திடீர் திருமணம் ,புரிதலான கணவன் அன்பு கூடான புகுந்த வீடு என வாழ்ந்திட. சுற்றியுள்ள உறவுகள் இவளை மாற்றி ,பின்னர் வருந்தி தன்னவனோடு சரண்புகுவது அதுவும் மிகுதியான காதல் நிலையே.❤❤❤❤
உதயகுமார்- இவரால் தன் குடும்பமே படும் பாடு விதியே. அதிலும் மூத்த மகன் இவரின் பால் திண்டாடுவது. இவருக்கு இவனே தகப்பன் என உணர தோன்றியது. ❤👌
சுகன்யா- சாதாரன இல்லத்தரசி. மகன்களின் மேல் இருக்கும் பாசம் அலாதியான ஒன்று. கணவனின் தவறை நினைத்து வெதும்பி,பின்னர் தன்னை செதிக்கிகொள்வது சராசரி பெண்ணாக புரிந்து வாழ்வது அருமை.❤❤
இப்படி இன்னும் பல பாத்திர படைகளோடு குடும்ப பாங்கான அருமையான கதை. 👏👌❤
ஆசிரிய தோழியே.
தந்தை தவறை மகனின் நிலையிலிருந்து பார்த்து அதை உணர்வுகளோடு சொல்லி சென்றது அருமைமா. அதுவும் குடும்பத்து மூத்த மகனின் ஒவ்வொரு அணுகுமுறையும் அருமையாக சொல்லி சென்றது அருமை.👏👌👏💖💖💖
விஷாகனின் காதல் ,பாசம்,புரிதல் என எல்லாமே அழகு.
இவனின் பெயருக்கு ஏற்றார் போல தகப்பன் சுவாமியே தான்.
ஆறு மணியுடனான இவனின் வருகை கந்தசஷ்டி கவச பாடல் தாயின் நிலைப்பாடு என எல்லா நிலைகளும் அருமையாக இருந்தது .👏❤❤❤❤❤
குடும்பம் ,உறவுகளின் ஏற்ற இறக்க வருகை,சலிப்பு, பொறாமை,பகைமை,மற்றும் பாசம் , இணைபிறியாத புரிதலான உறவுகள், காதல் யாரையும் விட்டுக் கொடுக்காது என கலவை உணர்வுகளை தந்து நேரிடையாக பார்த்த உணர்வையும் தந்திர்கள்மா வாழ்த்துக்கள் .👏👌👏👏🌹🌹
அருமையான எழுத்தாக்கம் வாழ்த்துக்கள் மா.
Reni Angeline raj review for நீயின்றி வாழ்வேது
நீயின்றி வாழ்வேது.
அடி தடி ல ஆர்ப்பாட்டமா ஆரம்பித்த கதை.
கதைக்கான Basic concept காதலை அழகா கோர்வையா கணவன் மனைவிக்கிடையேயான உண்மையான புரிந்துணர்வை வைத்து அழகான மாலையாக கோர்த்து போட்டியை அழகாக்கியுள்ளார்.
அழகான அருமையான உள்ளத்தை தொட்ட வரிகளோடு கதையை நகர்த்திய விதம் பாராட்டுக்குரியது.
கொஞ்சம் நீண்டது போல் தோன்றினாலும் சலிக்கவில்லை.