Skip to content
Share:
Notifications
Clear all

ருத்ரமாதேவி - 57

1 Posts
1 Users
0 Reactions
86 Views
Arulmozhi Manavalan
(@arulmozhi-manavalan)
Posts: 148
Member Author Access
Topic starter
 

அத்தியாயம் 57

 

        கல்லூரி சுற்றுலாவில் கலைச்செல்வியை காப்பாற்றி தன் நண்பர்களையும் கைது செய்ய காரணமாக இருந்த ருத்ராவையும் தமிழ் வேந்தனையும் பழிவாங்க நேரம் பார்த்து காத்துக் கொண்டு இருந்தான் இந்த காமேஷ். 

 

       தமிழ் வேந்தனும் ருத்ராவும் தனியாக கிழக்கு கடற்கரை சாலையில் செல்வதாக அவர்களை கண்காணிக்க வைத்திருந்த நபரிடம் இருந்து செய்தி கிடைக்கவும், தன் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தான். 

 

அவர்கள் தங்கும் விடுதியில் வேலை செய்யும் ஒருவனுக்கு பணத்தாசை காட்டி அவர்கள் குடிக்கும் குளிர் பானத்திலோ அல்லது உண்ணும் உணவிலோ போதை மருந்தை கலக்க ஏற்பாடு செய்திருந்தான். 

 

தன் நண்பர்களுக்கு ஃபோன் செய்து அங்கு சென்று மயக்கத்தில் இருக்கும் ருத்ராவின் கற்பை சூறையாட சொல்லியிருந்தான்.  

 

அனைத்தும் அவனின் திட்டப்படியே நடந்து, ருத்ராவும் தமிழ் வேந்தனும் போதை மருந்து கலந்த குளிர் பானத்தை குடித்தும் விட்டனர். 

 

இந்த ஜென்மத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்து நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற விதி உள்ளது போல. 

 

சதாசிவத்திற்கு தன் மகளுக்கு ஏதோ ஆபத்து என்று தோன்றிய உள்ளுணர்வினால் விரைந்து வந்து தன் மகளை காப்பாற்றி விட்டார். 

 

விசாரணை தொடர தொடர அந்த சொகுசு மாளிகையின் பல மர்மங்கள் புற்றீசல் போல வெளிவந்தது. 

 

ஆறு வயது சிறுமியிலிருந்து அறுபது வயது வரை உள்ள பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி உள்ளார்கள். 

 

அவர்களை அடித்து கொடுமைப்படுத்தி அவர்கள் சொல்படி நடக்க வைத்துள்ளனர். அனைத்தும்  பணத்திற்காக வீடியோக்களாக பதிவு செய்து வைத்துள்ளனர். அதுவே இப்போது அவர்களுக்கு எதிராக ஆதாரமாக மாறியது. 

 

குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வழக்கு காவல்துறையில் இருந்து மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. 

 

அவை அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வர தமிழ்நாடே அதிர்ந்தது. பல பெரிய மனிதர்கள் இதில் இருப்பது தெரிய வந்தது. 

 

செய்தி ஊடகங்கள் அனைத்திலும் இச்செய்தி மட்டுமே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பானது. முகம் மறைக்கப்பட்ட பெண்கள் தாங்கள் அனுபவித்த இன்னல்களை விவரிக்கும் காட்சியை ஒளிபரப்பு செய்ய ஊடகங்கள் போட்டி போட்டன. 

 

சமூக ஆர்வலர்களும் மகளிர் அணி குழுக்களும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அந்த காமுக கயவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் போராட்டம் செய்ய ஆரம்பித்தார்கள். 

 

ஆளும் கட்சிக்கு அழுத்தம் அதிகரித்தது. முதல்வர் வழக்கை விரைவாக முடித்து பாரபட்சம் இல்லாமல் தவறு செய்த அனைவருக்கும் தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்று மக்களுக்கு கூறினார். 

 

ஒரு மாத முடிவில் விசாரணை அனைத்தும் முடிந்து வழக்கு நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு காத்திருந்தது. 

……….…

 

மருத்துவமனைக்கு அழைத்து வந்த தமிழ் வேந்தன் ருத்ரா இருவருக்கும் சிகிச்சை அளித்து போதை தெளிவிக்கப்பட்டது. 

 

தமிழ் வேந்தன் தான் செய்த செயலின் வீரியம் உணர்ந்து தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தான். அவனை அறியாமல் நடந்திருந்தாலும் தவறு தவறு தானே. இதை எப்படி சரி செய்வேன்? எப்படி சதாசிவம் மாமா முகத்தில் முழிபேன்? என்று தனக்குள்ளேயே மருகிக் கொண்டு இருந்தான். 

 

ஆனால் ருத்ரா இன்னும் மயக்கத்தில் இருந்து வெளியே வரவில்லை. அவளின் உதடுகள் 'வேந்தே, வேந்தே' என்று சத்தம் இல்லாமல் முனுமுனுத்துக் கொண்டு இருந்தது. 

 

அவளுக்கு பூர்வ ஜென்ம ஞாபகங்கள் வந்து இப்பொழுது நடப்பது போல் அவளின் முகத்தில் எதிரொலித்தது. மகிழ்ச்சி, பாசம், கோபம், கேளி, விளையாட்டு, வீரம், காதல் என்று வித விதமான உணர்வுகள் அவளின் முகத்தில் வந்து போனது. 

 

கடைசியாக கழுத்தில் கை வைத்து தடவினாள். பின்னர் தன் மணி வயிற்றில் கை வைத்து மெதுவாக வருட, கண்களில் கண்ணீர் வழிய "வேந்தே" என்று அலறியடித்து எழுந்தாள். 

 

ருத்ராவின் குரல் கேட்டு அவளின் தாயும் தந்தையும் அவளின் அருகில் சென்று கையை பிடிக்க, இருவரையும் மாறி மாறி பார்த்து கண்ணீரோடு இருவரையும் அணைத்துக் கொண்டாள். 

 

இருவரும் அவளின் தலையை ஆதரவாக தடவி ஆறுதல் அளித்தனர். அவளின் கண்கள் அறை முழுவதும் தேடி அங்கு இருக்கும் ஷோபாவில் தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கும் தமிழ் வேந்தனில் நின்றது.  

 

அவளின் அலறல் சத்தத்திலும் தலை நிமிராமல் அமர்ந்திருந்தான்.  ஆனால் ருத்ராவோ மயக்கம் தெளிந்து எழுந்ததிலிருந்து தமிழ் வேந்தனை தான் காதலுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

 

தன் நண்பனின் நிலையில் வருந்தி அவனின் தந்தைக்கு அழைத்து  உடனே கிளம்பி சென்னைக்கு வருமாறு கூறினான் ராஜசேகர். 

 

என்னவோ ஏதோ என்று பதறி அடித்துக் கொண்டு தமிழ் வேந்தனின் தாய் உமா மகேஸ்வரியும் தந்தை சங்கரேஷ்வரரும் சென்னைக்கு வந்தனர். 

 

சென்னைக்கு வந்தவர்களை நேராக சதாசிவத்தின் வீட்டிற்கு அழைத்து வந்தான் ராஜசேகர். தங்கள் வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்க வந்த மகாதேவியை கண்டு உமா மகேஸ்வரி ஆனந்த அதிர்ச்சி அடைந்து அவளை விரைந்து நெருங்கி இறுகி கட்டிக் கொண்டாள். இருவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. 

 

தங்கையை அங்கு கண்ட சங்கரேஷ்வர் மனம் வருந்தி அவளிடம் மன்னிப்பு கேட்க, அவளும் புன்னகைத்தே உள்ளே வருமாறு அழைத்து வந்தார். 

 

தங்கள் வீட்டிற்கு வந்தவர்களை இனிமையாக இன்முகத்துடனே வரவேற்றார் சதாசிவம். அவரிடமும் சங்கரேஷ்வர் கை கூப்பி மன்னிப்பு வேண்ட அவரின் கையை பிடித்து இறக்கி தோளுடன் அணைத்து "விடுங்க மச்சான்" என்றார் சதாசிவம். 

 

பின்னர் நடந்த அனைத்தையும் கூறினார் சதாசிவம். அனைத்தையும் கேட்ட தமிழ் வேந்தனின் பெற்றோர்கள் கலங்கி நின்றனர். அதே நேரம் ராஜசேகர் தமிழ் வேந்தனை அழைத்துக் கொண்டு வந்தான். 

 

அங்கு தன் பெற்றோரைக் கண்ட தமிழ் வேந்தன் அதிர்ந்து தன் தாயை அணைத்து கண்ணீர் வடிய என்னை "மன்னித்து விடுங்கள் அம்மா" என்று அழுதான். 

 

அவரும் அவனுக்கு ஆதரவாக முதுகை தடவி "தெரியாமல் செய்த தவறு தானே, விடு தமிழ்" என்று கூறினார். 

 

இருந்தும் தயக்கத்துடனே தன் தந்தையையும் சதாசிவத்தையும் காண சதாசிவன் அவனின் தோளுடன் அணைத்து "அனைத்தையும் மறந்து விடுங்கள் மாப்பிள்ளை" என்றார் புன்னகையுடன். 

 

அவரின் மாப்பிள்ளை என்ற அழைப்பில் கண்கள் விரிய அவரையும் தன் பெற்றோரையும் கண்டான் தமிழ் வேந்தன். 

 

அந்த மாப்பிள்ளை என்ற ஒரு சொல்லிலேயே சதாசிவத்தின் எண்ணம் புரிந்துவிட உமா மிகவும் மகிழ்ந்து மகாதேவியை அணைத்து "நாம் இருவரும் இதுவரை தோழிகளாக இருந்தோம். இன்று சம்மந்திகளாக மாறிவிட்டோம். இனிமேல் நாம் பிரிய வேண்டிய அவசியம் இல்லை" என்று மகிழ்ந்தனர்.

 

தொடரும்...

 

- அருள்மொழி மணவாளன்...


 
Posted : January 4, 2026 8:21 am

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved